பார்த்திபனின் புதிய படத்தை பாராட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள்.

இந்நிலையில், பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் பார்த்திபனை பாராட்டி இருக்கிறார். இந்த மகிழ்ச்சியோடு டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ள பார்த்திபன், ‘இரவின் நிழல்’ படத்துக்கு இன்று இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது.

‘இது ஒரே ஷாட்டில் தயாராகும் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்’ என்று பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார். வைரல் ஆகப்போகும் இசை பிரளயத்திற்காக” என்று பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.