பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ராணி ராம்பால், மன்பிரீத் சிங் வாழ்த்துகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து, இந்திய வீரர்கள் வெற்றி கோப்பையுடன் திரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.