Tamilவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 – நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

39 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஜேக்கப் டஃபி இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் கேப்டன் சதாப் கான் 42 ரன்களும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. ஜேக்கப் டஃபி 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குக்கெலின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட் 57 ரன்கள் விளாசினார்.

மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.