பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மூளையதிர்ச்சி பரிசோதனை

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்காக நேற்று ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் பந்து தலையில் பலமாக தாக்கியது.

இதனால் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறினார். உடனே அவருக்கு மூளையதிர்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது.

என்றாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

2-வது போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்த பின் போட்டியில் சேர்க்கப்படுவார் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.