பயத்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்து போராட முடியும் – அஸ்வின் கருத்து

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப்பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.

நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேர் உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.

முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார்.

மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்க்ள. தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.

உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.