பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கிய ஓவியா

மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதால், அவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது.

இதனால் நடிகை ஓவியா வெப் தொடர் பக்கம் திரும்பி உள்ளார். மெர்லின் எனும் வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை யூடியூப்பில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் தற்போது ஓவியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.