படம் தயாரிப்பதற்காக வீட்டை விற்பனை செய்த நடிகர் அர்ஜுன்

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, ”தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன்.

அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்.