நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 – இந்தியா வெற்றி

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மவுண்ட் மாங்கானுவில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதைடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார்.

இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.