நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் – பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது சேர்ப்பு

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனில் உள்ளனர்.

நாளைமறுநாள் உடன் 14 நாட்கள் கோரன்டைன் முடிவடைகிறது. அதன்பின் தீவிர பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் அதேவேளையில் ‘ஏ’ அணியும் விளையாடுகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 18-ந்தேதி தொடங்க இருக்கும் டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது, ஆல்-ரவுண்டர் ஹுசைன் தலாத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று விளையாடிய போது சர்பராஸ் அகமது இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.