நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நெற்றிக்கண் படக்குழு

நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை அமெரிக்காவில் காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் குழுவினர் அவரது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளனர். இதற்காக ஆதரவற்ற குழந்தைகள் ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளனர். நெற்றிக்கண் படக்குழுவினரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். பிளைண்ட் எனும் கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இதனை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் தாரா நடிக்க உள்ளார். இதற்காக அவர் விரதமிருந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *