Tamilசினிமா

நயன்தாராவின் ‘ஐரா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் வெளியாகியுள்ளது.

சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *