நடைப்பயிற்சியின் போது முதியவருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வைரலாகும் வீடியோ
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்றுமுன்தினம் அடையாறில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். முதலமைச்சருடன், அமைச்சர் மா. சுப்பிரமணியன், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, முதியவர் ஒருவர் மு.க. ஸ்டாலினுடன் உரையாடினார். அப்போது அந்த முதியவர் “உங்களது ஆலோசனையின் பேரில், அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருமானம் தேடிக்கொடுத்துள்ளார். ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் கிடையாது. தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது” என முதல்வரிடம் தெரிவித்தார்.
அதற்கு முதலமைச்சர் பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.