நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார்.

மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.