நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் திருமணம்? – கிரிக்கெட் வீரர் பும்ரா பற்றி பரவும் பரபரப்பு தகவல்

இந்திய அணியின் முன்னணி் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தனிப்பட்ட காரணத்திற்காக 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, பும்ரா கேட்டுக்கொண்டதை அடுத்து அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

பும்ரா விடுப்பு எடுத்ததற்கான காரணம் அண்மையில் வெளியாகின. அதன்படி அவர் தனது திருமணத்திற்கு தயாராவதால் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், பும்ரா யாரை திருமணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ராவின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இனிய விடுமுறை எனக்கு’ என பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா இவரைத் தான் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.