நடிகர் மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.