நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் வழக்கில் அதிரடி மாற்றம்!

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து நடிகர் ஆர்யா காவல்துறையிடம் நேரில் ஆஜராகி ’புகார் அளித்த பெண் தனக்கு யார் என்று தெரியாது என்றும் அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்பதை காவல்துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சென்னை சைபர் கிரைம் போலீசார் முகமது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து உள்ளனர். இவர்கள்தான் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் ஆர்யா என ஏமாற்றி அவரிடம் பண மோசடி செய்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.