தொண்டர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயார் – துரை வைகோ பேச்சு

அலங்காநல்லூரில் ம.தி.மு.க. நிறுவனர் வைகோவின் ஆவண பட திரையீட்டு விழா நடந்தது. இதில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவண படத்தை திரையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. தொண்டர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயாராக உள்ளேன். மதவாத சக்திகள் தமிழகத்தில் காலுன்ற விடக்கூடாது. எனவே அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

தமிழகத்தில் மதவாத சக்திகள் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதில் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.