தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கெளதம் கார்த்திக் நம்பிக்கை
முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கவுதம் கார்த்தி பேசும்போது, “இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.
என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்” என்றார்.