தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க முடிவு!

கல்வித்துறை சார்பில் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* பள்ளிகளில் உள்ள அனைத்து அறைகளையும், வளாகத்தினையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

* விடைத்தாளுடன் முகப்பு சீட்டினை தைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

* மாணவர்களின் நுழைவுச்சீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நுழைவுச்சீட்டினையே பயன்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், நுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வு மையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்பெற்று இருக்கும் என்பதாலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தினை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்.

* வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாவட்டத்துக்கு திரும்பிவிட்டார்களா? என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

* மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போது, முககவசம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 3 முகக்கவசமும், அதேபோல் தேர்வு எழுத உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஒரு முககவசமும் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *