தெலுங்கானா காட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்திய போலீஸ் – ஒரு மாவோயின்ஸ்ட் பலி

தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள துப்பாகுடம் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள செக்போஸ்ட்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

துப்பாகுளம் செக்போஸ்ட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும், போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 25 வயது நிரம்பிய ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். மற்றொருவன் பைக்கை அப்படியே போட்டுவிட்டு அருகில் உள்ள வயல்வெளிக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.