தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹாக்கி தொடர் – 3வது போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்த இந்திய மகளர் ஹாக்கி அணி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி,தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
இந்திய அணி தரப்பில் ராணி 2-வது நிமிடத்திலும், தீப் கிரேஸ் எக்கா பெனால்டி கார்னர் வாய்ப்பில் 18-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 20-வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 46-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முந்தைய 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 5-1 மற்றும் 7-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.