தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது போட்டியில் கோலி விளையாடுவாரா? – கே.எல்.ராகுல் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. முதுகுவலி காரணமாக அவர் அப்போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து 2-வது டெஸ்டுக்கு லோகேஷ் ராகுல் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறும்போது, விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே நன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

சில நாட்களாக அவர் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு நன்கு ஓடுகிறார். அவர் 3-வது டெஸ்டுக்கு உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கூறும்போது, விராட் கோலி வலைப்பயிற்சியில் நன்றாக செயல்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.