Tamilசினிமா

தென்னிந்திய பிரபலங்களில் முதலிடத்தை பிடித்த தனுஷ்!

நடிகர், பாடகர், பாடலாசியர், இயக்குநர், தயாரிப்பாளர் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் பிரபலங்களின் பட்டியிலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர்.

இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளார்.

இதுதவிர தனுஷ் தனுஷ் இயக்கி நடிக்கும் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம், ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்த்தில் தலா ஒரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் வடசென்னை இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *