தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு

 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி,
துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதேபோல் நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு,
ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், தலைவர் நாசர் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது குறித்தும், அதற்கான நிதி திரட்டுவது குறித்தும் செயற்குழுவில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.