துறைமுகங்கள் இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கியது

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய கபடி, கேரம், செஸ் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கின.

பெருந்துறைமுகங்கள் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஏப்ரல் 21 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 துறைமுகங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் உடல் மற்றும் மனநல மேம்பாட்டுக்காக இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் எஸ் பாலாஜி அருண் குமார், காமராஜர் துறைமுகத்தின் பொது மேலாளர் சஞ்சய் குமார், இருதுறைமுகங்களின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.