தீயில் விளையாடும் நடிகை அதிதி பாலன் – வைரலாகும் வீடியோ

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். மேலும் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நவரசா படத்திலும் அதிதி பாலன் நடித்திருந்தார்.

தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள்.