தீபிகா படுகோனே குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார்.

பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.