தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு? – 28 ஆம் தேதி ஆலோசனை

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28-ந்தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து அரசு சார்பில் அறிவிக்கப்படும்.