திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை டாப்ஸி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் ‘சபாஷ் மிது’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘லூப் லபேடா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது 11 வருட சினிமா வாழ்க்கையில் ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளனர். என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.