திருமணம் பற்றிய தகவலை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் காதல் எப்போது உருவானது என்பது பற்றி விக்னேஷ் சிவனே கூறியிருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் பட நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது, “எங்கள் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்த புதிதில்தான் நானும் ரவுடி தான் படத்தின் இன்டர்வெல் பிளாக் எடுத்து கொண்டிருந்தோம். அதில் முக்கியமான ஒரு ஷாட்டில் சாரும், நயனும் லிப்லாக் செய்யும் காட்சிக்கு முன்னதாக உதட்டின் அருகில் உதடு வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த ஷாட்டை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளலாம் என்று நயன் சொன்னார்.

நான்தான் இதிலென்ன இருக்கு எடுக்கலாம், ரொம்ப முக்கியமான ஷாட், அப்படிதான் செய்யனும் என்று எடுத்தோம். அந்த சீன் எடுக்கும் போது, இன்னும் நெருக்கமாக வாங்க… இன்னும் வாங்க என நான் சொன்னதால் கடுப்பான நயன்தாரா, மெதுவாக பக்கத்தில் வந்து, ‘சைக்கோ’ என திட்டிவிட்டு போனார்”, என்றார். நானும் ரவுடி தான் படம் முடிந்ததும், இன்னொரு செமயான படம் பண்ணிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம் என்று கூறியிருந்தார் விக்னேஷ் சிவன்.