திருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்தி குத்து

மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென காரை யோகேஷ் என்பவர் வழிமறித்துள்ளார்.

தன்னை ஒரு தயாரிப்பாளர் என்றும் தன்னை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த மல்கோத்ரா அவரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிற்றிலும் கைகளிலும் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த நடிகை மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மால்வி மல்கோத்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்திய யோகேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.