திமுக-வில் இணையும் நடிகர் விஷால்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரே இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் அந்தக் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், விஷாலோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.