திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் – ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு தெரியவில்லை. வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பியவருக்கு திடீரென நிதி அமைச்சர் பதவியை கொடுத்துள்ளனர். அதனால் வளைகாப்பு தம்பியான அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்.

இதுபோன்ற நிதி அமைச்சரை தமிழகம் பெற்று இருப்பது வேதனையான வி‌ஷயமாகும்.

அமைச்சர்கள் யாரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுவிட்டது.

கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. நியாயமான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. பெருவாரியான வெற்றியை பெறும். அதன் மூலம் நாளை எங்களுக்கு சாதகமான நிலைமாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.