திமுகவின் வாக்குறுதிகளை அதிமுக காப்பியடிக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜன், நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான்.

* திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை அப்படியே அதிமுக காப்பி அடிக்கிறது.

* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.