தாம்பரம் – வேளச்சேரி இடையிலான புதிய பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் காரில் பயணம் செய்தார்.