தளபதி 63 படத்தின் மூன்றாவது பாடல் ரெடி!
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி ரிலீஸ் என்பதால் படக்குழுவினர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். விஜய் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் சமீபத்தில் படமாக்கினார்கள்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாடல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பாடல் ரெகார்டிங் பணிகளின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.