தமிழில் இதுவரை வராத படம் இது – புதிய படம் குறித்து நடிகை அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’. நடிகர் விஜய் சேதுபதி பர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீசரை வெளியிட, கமல்ஹாசன் சமீபத்தில் இதன் டிரைலரை வெளியிட்டார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ஹாசன், இப்படம் பற்றி கூறும்போது, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு திரைப்படம் போல் தமிழில் இதுவரை வந்தது இல்லை. இந்தியாவில் முதல் படம். இயக்குனர் ராஜா ராமமூர்த்தி கதை சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. என்னால் 100 சதவிகிதம் உழைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வேன். அதுபோல், இந்த படத்தில் பவித்ரா கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் ஏற்றேன். கதை கேட்கும் போது ஆடியன்சாகத்தான் கேட்டேன். நான் ரசித்ததுபோல் நீங்களும் ரசிப்பீர்கள். படக்குழுவினர் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. விரைவில் இயக்குவேன். அது 2022 ஆம் ஆண்டில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க, பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.