தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணி கைப்பற்றியது
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.
ஏலம் தொடங்கியது முதலே பல்வேறு அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை தங்கள் வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், 30 லட்ச ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது வருண் சக்ரவர்த்தியை 8.40 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.