தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழே வருமாறு:-

தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தாநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்.

மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாக வேண்டும்.

சமூக நீதி, மதநல்லிணக்கம் செழித்து சிறந்திருப்பதை பார்த்து பொறுத்துகொள்ள இயலாமல் சிலர் உள்ளனர். அவர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.