தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று  கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,627 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 51 ஆயிரத்து 60 மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,027 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்துள்ளது.