தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.
கோரோனாவால் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசும் எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
துபாயில் இருந்து சென்னை வந்த 71 வயது முதியவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார்.
ரத்த மாதிரிகளின் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.