தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த தொடர் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *