தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 69 சதவீதம் பேர். 2-வது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தற்போது 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.