தனுஷின் 44வது படத்தில் இணைந்த பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவஹர். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த, அனிருத்தும் தனுஷும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவும், பிரகாஷ்ராஜும் டி44 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாரதிராஜாவும் தனுஷும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.