தனுஷின் 44வது திரைப்படம் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன், இயக்குனர் மித்ரன் ஜவகர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் தனுஷ், இயக்குனர் மித்ரனுடன் கூட்டணி அமைப்பது இது 4-வது முறை, இதற்கு முன்னர் இவர்கள் இருவரும், யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.