தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து தற்போது மித்ரன் ஜவஹார் இயக்கி வரும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.