Tamilசினிமா

தணிக்கை துறையால் தடை செய்யப்பட்ட 793 திரைப்படங்கள்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில், 231 இந்திப்படங்களும், 96 தமிழ்ப் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னடப் படங்களும், 23 மலையாள படங்களும், 17 பஞ்சாபி படங்களும் அடங்கும். கடந்த 2015-2016 ஆண்டில் அதிகபட்சமாக 153 படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 2014-15-ல் 152 படங்களும், 2013-14-ல் 119 படங்களும், 2012-13-ல் 82 படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதில் பெரும்பான்மையான படங்கள் பாலியல் மற்றும் குற்றம் சார்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *