தடாசனம் யோகா பற்றி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தினார்.

இதையடுத்து ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. இதையடுத்து ஐ.நா ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று திரிகோண ஆசனம் எனும் யோகா பயிற்சியினை தான்மேற்கொள்வது போல் கார்டூன் வீடியோவை வெளியிட்டார். இன்று தடாசனம் என்ற யோகாசனத்தை கார்டூன் வடிவில் மீண்டும் தான்யோகா செய்வதை போல் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி, ‘தடாசனத்தை முறையாக செய்யப்பழகினால் மற்ற யோகாசனங்களை மிக சுலபமாக செய்ய முடியும். இந்த ஆசனம் குறித்த விவரங்களை வீடியோ மூலம் அறிந்து கொள்க’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *