டோனி படைத்த புதிய சாதனைகள்

ஐபிஎல் 2020 சீசன் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. அம்பதி ராயுடு மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அரைசதம், சாம் கர்ரன் அதிடி ஆட்டம் ஆகியவற்றால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே அணிக்கு கேப்டனாக 100 வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் என்ற பெருமையை எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக 100 வெற்றிகள் பெற்ற நபர் என்ற பெருமையை பெற்றிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும், லுங்கி நிகிடி பந்தில் குருணால் பாண்ட்யாவை கேட்ச் பிடித்து ஆட்டமிக்கச் செய்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 250 பேர் அவுட்டாக்கிய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.