டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம்

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் களத்தில் கால்பதிக்கும் 125 இந்தியர்களின் முழு பட்டியல் வருமாறு:-

வில்வித்தை

ஆண்கள் ரீகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு: தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ்

பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவு:

தீபிகா குமாரி

தடகளம்

நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ( இருவரும் ஈட்டி எறிதல்)

பாவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைபந்தயம்)

கே.டி.இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோகிலா (3 பேரும் 20 கிலோமீட்டர் நடைபந்தயம்)

குர்பிரீத் சிங் (50 கிலோமீட்டர் நடைபந்தயம்)

அபினாஷ் சேபிள் (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்)

ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்)

கமல்பிரீத் கவுர், சீமா பூனியா (பெண்களுக்கான வட்டு எறிதல்)

தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்)

டுட்டீ சந்த் (பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம்)

எம்.பி.ஜாபிர் (400 மீட்டர் தடை ஓட்டம்)

அன்னுராணி ( பெண்களுக்கான ஈட்டி எறிதல்)

அமோல் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ், முகமது அனாஸ், நாகநாதன், நோவா நிர்மல் தோம் (4×400 மீட்டர் தொடர் ஓட்டம்)

சர்தாக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி, ரேவதி, சுபா, தனலட்சுமி (கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டம்)

பேட்மிண்டன்

பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்), சாய்பிரனீத் (ஒற்றையர்), சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி (இரட்டையர்)

குத்துச்சண்டை

ஆண்கள் பிரிவு : சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), ஆஷிஷ்குமார் (75 கிலோ), விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ)

பெண்கள் பிரிவு

மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ).

குதிரையேற்றம்

பவாத் மிர்சா

வாள்வீச்சு

பவானிதேவி (பெண்களுக்கான சாப்ரே)

கோல்ப்

அனிர்பன் லஹிரி, அதிதி அசோக், உதயன் மானே

ஜிம்னாஸ்டிக்ஸ்

பிரனதி நாயக் (பெண்களுக்கான ஆர்டிஸ்டிக்)

ஆக்கி

ஆண்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித், ஷம்ஷிர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப்சிங், வருண்குமார், சிம்ரன்ஜித் சிங்.

பெண்கள்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நிஷா, நேஹா கோயல், சுஷிலா சானு, மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், சலிமா, நவ்னீத் கவுர், லால்ரம் சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, ரீனா கோகர், நமிதா தோப்போ.

ஜூடோ

சுஷிலா தேவி (பெண்கள் 48 கிலோ)

துடுப்பு படகு

அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் (ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)

பாய்மர படகு

நேத்ரா குமணன் (பெண்களுக்கான லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டான்டர்டு), கணபதி- வருண் தக்கர் (ஸ்கிப் 49இஆர்)

துப்பாக்கி சுடுதல்

தனிநபர் பிரிவு (பெண்கள்):

அஞ்சும் மோட்ஜில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), தேஜஸ்வினி சவாந்த் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), அபூர்வி சண்டிலா (10 மீட்டர் ஏர் ரைபிள்), இளவேனில் (10 மீட்டர் ஏர் ரைபிள்), மானு பாகெர் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), யஷாஸ்வினி தேஸ்வால் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராஹி சர்னோபாத் (25 மீட்டர் பிஸ்டல்)

தனிநபர் பிரிவு (ஆண்கள்):

திவ்யான்ஷ் சிங் பன்வார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), சவுரப் சவுத்ரி (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), அபிஷேக் வர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), தீபக்குமார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), அன்காட் வீர்சிங் பஜ்வா (ஸ்கீட்), மைராஜ் அகமத்கான் (ஸ்கீட்)

கலப்பு அணிகள் பிரிவு:

10 மீட்டர் ஏர் ரைபிள்: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக் குமார், அஞ்சும் மோட்ஜில்

10 மீட்டர் ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி தேஸ்வால்.

நீச்சல்

சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), ஸ்ரீஹரி நடராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), மானா பட்டேல் (பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்)

டேபிள் டென்னிஸ்

ஒற்றையர் பிரிவு: சரத்கமல் , சத்யன், மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி. கலப்பு இரட்டையர்: சரத்கமல்-மனிகா பத்ரா

டென்னிஸ்

சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா (பெண்கள் இரட்டையர்), சுமித் நாகல் (ஒற்றையர்)

பளுதூக்குதல்

மீராபாய் சானு (பெண்களுக்கான 48 கிலோ)

மல்யுத்தம்

ஆண்கள்

ரவி தாஹியா (57 கிலோ பிரீஸ்டைல்), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ)

பெண்கள்

வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சீமா பிஸ்லா (50 கிலோ).